குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என மாநிலங்கள் கூற முடியாது : அமித் ஷா திட்டவட்டம்!
Sep 22, 2026, 05:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என மாநிலங்கள் கூற முடியாது : அமித் ஷா திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 10:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்து முடியாது என மாநிலங்கள் கூற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் செய்தி  நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, ராகுல் காந்தி, மம்தா அல்லது கெஜ்ரிவால் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பொய் அரசியலில் ஈடுபடுகின்றன.  பாஜக தனது 2019 தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டம்  கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தோம்.

அந்த வாக்குறுதியின் கீழ், குடியுரிமை (திருத்தம்) மசோதா 2019 இல் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கோவிட் காரணமாக அது தாமதமானது. எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக பிரச்சினை கிளப்புகின்றன என தெரிவித்தார்.

சிஏஏ அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற கூற்றை நிராகரித்த ஷா, அவர்கள் எப்போதும் 14வது பிரிவைப் பற்றி பேசுகிறார்கள். அந்த சட்டப்பிரிவில் இரண்டு உட்பிரிவுகள் இருப்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள் என்றார்.

இண்டி கூட்டணி ஆட்சிக்கு வராது என்பது அவர்களுக்கும் தெரியும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் குடியுரிமை திருத்த சட்டம்  கொண்டு வந்தது. சிஏஏவை ரத்து செய்வது சாத்தியமற்றது.இது முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டம்.

உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்கவில்லை. சிஏஏவை அமல்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை உத்தவ் தாக்கரே தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர் சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக அரசியல் செய்து வருகிறார்.

சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிக்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு எதிராக கெஜ்ரிவால் குரலெழுப்புகிறார்.

அவர்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை இழந்து விட்டு, அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்கள். நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு இன்றி அவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் நாம் இரக்கம் காட்ட கூடாது? அவர்களுடைய நாடுகளில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு நம் நாட்டுக்கு வந்தவர்கள் மீது கெஜ்ரிவால் போன்ற தலைவர்களுக்கு இரக்கமே இல்லை என்றும் கூறினார்.

CAA மற்றும் NRC ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு,  “NRC க்கும் CAA க்கும் எந்த தொடர்பும் இல்லை. அஸ்ஸாம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் CAA செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். .

சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை. குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால் மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: amith shahcaahome ministry
Share
Tweet
SendShare
Previous Post

Google chrome பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை!

Next Post

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies