மார்ச் 29 முதல் ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்!
Mar 15, 2026, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்ச் 29 முதல் ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, வரும் 29-ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு மலை ரயில்களை இயக்க தெற்கு ரயில் முடிவு செய்துள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு, தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரயில் பயணம் செய்கின்றனர். இந்த மலை ரயிலில் பயணம் செய்வது தனிச்சிறப்பு வாய்ந்த அனுபவமாக உள்ளது.

ஏற்கனவே, இயக்கப்பட்டு வரும் மலை ரயில்களுடன் கூடுதலாக மலை இரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அந்த வகையில், வருகிற 29-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை, வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி குன்னூர் – ஊட்டி இடையே காலை 8:20 மணிக்கும், ஊட்டி – குன்னூர் இடையே மாலை 4:45 மணிக்கும் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தவிர, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9:10 மணிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்.

மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11:25 மணிக்கு ஊட்டியிலிருந்து  மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல், ஊட்டி – கேத்தி இடையே வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு காலை 9:45 மணி, காலை 11:30 மணி, மாலை 3:00 மணி என்ற இடைவெளிகளில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும்.

ஊட்டி – குன்னூர் இடையேயான மலை ரயிலில் உள்ள 5 பெட்டிகளில் 80 முதல் வகுப்பு, 130 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 210 இருக்கைகள் இருக்கும். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 4 ரயில் பெட்டிகளில், 40 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் இடம் பெற்றிருக்கும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags: ootyNilgiriscoonoorspecial hill rail
ShareTweetSendShare
Previous Post

கண் கலங்கிய அஸ்வினுக்கு ரோகித் செய்த உதவி : அஸ்வின் உருக்கம்!

Next Post

வாழை தோட்டத்தில் ராட்சத முதலை! – பீதியில் பொதுமக்கள்!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies