பீகாரில் பாரதிய ஜனதா கட்சியும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் (எல்ஜேபி) தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நடைபெற்ற சந்திப்பில் ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
சிராக் லோக் ஜனசக்தி கட்சி நிறுவனர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன். 2020ல் கட்சி இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஒரு பிரிவுக்கு சிராக் தலைமை தாங்குகிறார், மற்றொரு பிரிவுக்கு எல்ஜேபி நிறுவனர் ராம் விலாஸ் பவனின் சகோதரர் பசுபதி பராஸ் தலைமை தாங்குகிறார். இரு அணிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.