“வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தலைமையில் மக்கள் கோரிக்கைக்கான கருத்துப்பெட்டி வைக்கப்பட்டது.
திருச்சி மக்களவைத் தொகுதி முழுவதும் “வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில் மக்கள் கோரிக்கை கருத்துப் பெட்டி வைக்கப்பட்டது.
இந்த கருத்துப் பெட்டியில் பொது மக்கள் பலரும் தங்களது கோரிக்கையை பதிவிட்டனர்.
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த், “வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் மக்கள் கருத்துப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதில், பொது மக்கள் தங்களது கோரிக்கையை எழுதிப் போடலாம். அவை அனைத்தும், பாஜக தலைமைக்கு செல்லும். திரு.ஹெச்.ராஜா உள்ளிட்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், அதனை தேர்தல் அறிக்கையில் சேர்த்துவிடுவார்கள் என்றார்.