விரிவுபடுத்தப்படும் தேசிய மாணவர் படை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
Jul 1, 2025, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விரிவுபடுத்தப்படும் தேசிய மாணவர் படை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

Web Desk by Web Desk
Mar 14, 2024, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.), கூடுதலாக 3 லட்சம் பேரை சேர்த்து விரிவாக்கம் செய்வதற்கான பரிந்துரைக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது. இதில், உள்ள மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி, கல்வி நிறுவனங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், தேசிய மாணவர் படையை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விரிவாக்கம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் என்.சி.சி-க்காக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும்.

இது தொடர்பாக, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “கடந்த, 1948-ஆம் ஆண்டு 20 ஆயிரம் மாணவர்களுடன் தேசிய மாணவர் படை தொடங்கப்பட்டது. இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளதால், கூடுதலாக மூன்று லட்சம் மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் என்.சி.சி.,யின் மாணவர்கள் பலம், 20 லட்சமாக அதிகரிக்கும். மேலும், உலகின் பெரிய சீருடை இளைஞர் அமைப்பாகவும் இது மாறும்.  என்.சி.சி.யின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், புதிதாக நான்கு பிரிவு தலைமையகங்கள் அமைக்கப்படும். மேலும், இரண்டு புதிய என்.சி.சி பிரிவுகளும் இதில் சேர்க்கப்படும். தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் படி, என்.சி.சி விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சம விகிதத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.  இந்த படையில் உள்ள மாணவர்களுக்கு தரமான பயிற்சி கிடைப்பதுடன் வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்படும்.

அதோடு, முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்களின் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், பயிற்சியாளரர்களாக நியமிக்கப்படுவர்.  இதன் மூலம், தேசத்தை கட்டியெழுப்புவதில், இளைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் சூழலை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags: Rajnath Singhdefence ministernccthree lakh vacancies
ShareTweetSendShare
Previous Post

பூமிக்கு வரும் மிகப்பெரிய ஆபத்து : சூரிய புயல் எச்சரிக்கை!

Next Post

சீமானுக்கு கிடைக்காமல் போன கரும்பு விவசாயி சின்னம்! – இதுதான் காரணம்?

Related News

புதுச்சேரி பாஜக தலைவராக வி.பி. ராமலிங்கம் பதவியேற்பு!

திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து உயிரிழந்த எதிரொலி – தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டட பொதுமக்கள்!

திருவள்ளூரில் ரூ. 75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு வட்டாட்சியர் கைது

சேலத்தில் கால்வாய் கட்ட பணம் தர மறுத்த வெள்ளிப் பட்டறை உரிமையாளரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் கைது!

சிங்கம்புணரி அருகே குவாரி மண் சரிவில் 6 பேர் பலியான வழக்கு – குவாரி உரிமையாளர், மேலாளருக்கு முன்ஜாமின்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – யாகசாலை இன்று தொடக்கம்!

எட்டயபுரத்தில் மகாகவி பாரதி இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

செயல்படாத தமிழக அரசு – மத்திய அரசு எல்.முருகன் குற்றச்சாட்டு!

குற்ற வழக்குகளை முடிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம் – ஆய்வாளர் மற்றும் ஏட்டுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை!

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 2029-ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக உயரும் – அமைச்சர் சர்பானந்த சோனோவால்

ஜிஎஸ்டி ஒட்டுமொத்த வசூல் 5 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு!

ரயில் கட்டண உயர்வு – நள்ளிரவு முதல் அமல்!

திருப்புவனம் இளைஞர் பலியான வழக்கு – ஆய்வு செய்த நீதிபதியின் காரை மறித்த பொதுமக்கள்!

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் தப்பியோட முயன்ற போது வலிப்பு வந்து உயிரிழந்தார் – காவல்துறையின் எப்ஐஆருக்கு பலத்த எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies