சீனாவில் உருவாக்கப்பட்ட செயலி தான் டிக் டாக். இதை செயலியை உலகம் முழுவதும் அதிகப்படியானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் டிக் டாக் செயலி உள்ளது என இந்தியா, கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்த செயலுக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்த வகையில், அமெரிக்காவில் அரசு ஊழியர்கள் இந்த டிக் டாக் செயலியை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
சமீபத்தில், அமெரிக்க அரசும் இந்த செயலி எந்த மின்னணு சாதனங்களில் இருக்க தடை விதிக்கக்கோரி பரிசீலனையை மேற்கொண்டுவந்தது. மேலும், டிக் டாக் செயலியை நீக்குவதற்கு 30 நாட்கள் அவகாசமும் கொடுக்கப்பட்டது.
சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலியை அமெரிக்காவிற்கு விற்க வேண்டும் அல்லது நிரந்தரமாக இந்த செயலுக்கு அமெரிக்க தடை விதிக்கும் என நிபந்தனை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிபந்தனைக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் ஆதரவுகளை வழங்கினர்.
மேலும் தொடர்ந்து டிக் டாக் செயலி குறித்த முறைகேடுகளும் இதனை தவறாக பயன்படுத்துவதாக தகவல்களும் வந்துகொண்டிருக்க இந்த செயலியை தடை செய்யவேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமில்லாமல், டிக் டாக் செயலியின் தலைமை நிறுவனமான ByteDance, சீனா அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும், சீன அரசுக்கு அமெரிக்கர்களின் தரவு தேவைப்படும் நேரத்தில் ஏறத்தாழ 170 மில்லியன் அமெரிக்கர்களின் தரவுகளை டிக் டாக் செயலியால் தரமுடியும் எனவும் அமெரிக்க சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கைவிடுத்தனர்.
அந்த வகையில், சமீபத்தில் டிக் டாக் செயலி குறித்த மசோதா அவைக்கு வந்திருந்தது. குறைவான பேச்சுவார்த்தையோடு இந்த மசோதா வாதிக்கப்பட்டது.
அந்த வகையில், 50 -50 என்கிற எண்ணிக்கையில் டிக் டாக் செயலியின் தடைக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தேசிய அளவின் இந்த டிக் டாக் செயலுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.