பிரதமர் மோடி நாளை, அதாவது மார்ச் 15-ம் தேதி அன்று, கன்னியாகுமரிக்கு வருகிறார். இதனையொட்டி, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி. தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
கன்னியாகுமரி வரும் பிரதமர் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக் கூட்டத்திற்கு செல்கிறார்.
அதாவது, காலை 11.15 -க்கு விவேகானந்தர் கல்லூரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனால், பொதுக்கூட்டம் நடைபெறும், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பகல் 12.15 -க்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் செல்கிறார்.
வரும் 18 -ம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 22 -ம் தேதி மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.