ஆபாசமான மற்றும் தவறான விஷயங்களை எச்சரிக்கையை மீறி தொடர்ந்து, ஒளிபரப்பி வந்த ஓடிடி தளங்கள், வலைத்தளங்கள், செயலிகள், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கி உள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ஆபாசமான மற்றும் தவறான விஷயங்களைக் காட்டும் சில செயலிகள் மற்றும் இணையதளங்களை முடக்கி உள்ளது. இவற்றில், 19 இணையதளங்கள், 10 செயலிகள் (7 Google Play Store, 3 Apple App Store) அடங்கும். மேலும், 12 பேஸ்புக் கணக்குகள், 17 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 16 எக்ஸ் கணக்குகள், 12 யூடியூப் கணக்குகள் என மொத்தம் 57 சமூக ஊடக கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் ஆபாச படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள செயலிகள், ஓடிடி தளங்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளின் உள்ளடக்கம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000, பிரிவு 67 மற்றும் 67A, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292 மற்றும் சட்டம், 1986-ன் பிரிவு 4 ஆகியவற்றை மீறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து நிபுணர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை செய்யப்பட்டுள்ள ஓடிடி செயலிகளில் ஒன்று, கூகுள் ப்ளே ஸ்டோரில் 1 கோடிக்கும் அதிகமானவர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. இரண்டு செயலிகள் 50 லட்சத்திற்கும் அதிகமான முறை பதிவிறக்கங்களை பெற்றுள்ளது.