பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரும் பிரதமர், பின்னர் கார் மூலம், அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
கன்னியாகுமரி வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளனர். பிரதமர் மோடியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.
பொதுக்கூட்டம் நடைபெறும், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, பகல் 12.15 -க்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் செல்கிறார்.
பிரதமர் ஹெலிகாப்டர் தரையிறங்கும் மைதானம், அரசு விருந்தினர் மாளிகை, பிரதமர் மோடி செல்லும் பாதை ,பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது.