கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிபங் பங்கேற்று தற்போது சிறப்புரையாற்றி வருகிறார்.
பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார்.
கன்னியாகுமரிக்கு வந்த பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தற்போது அவர் சிறப்புரைற்றுவருகிறார்.
கூட்டத்தில் பேசிய மோடி,
பாஜக 5ஜி கொண்டு வந்தது, ஆனால் காங்கிரஸ் 2ஜி ஊழல் செய்தது என விமர்சித்தார். திமுக- காங்கிரஸ், இண்டிக் கூட்டணி தமிழகத்திற்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களை கொடுக்காது எனக் குற்றம் சாட்டினார். திமுக- காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொள்ளை அடிப்பது தான் அவர்களது கொள்கை எனக் குற்றம்சாட்டினார். நாட்டை துண்டாடும் கூட்டணி இண்டிக் கூட்டணி.