நாடாளுமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை மத்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலுல் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டமும் நடைபெற்றது.
இதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் மக்களவை மற்றும் சில மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகிறது. இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு மதியம் 3 மணிக்கு தொடங்க உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுடன் அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. மேலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.