குளிர்சாதன பெட்டி மூலம் தண்ணீரை சேமிக்கும் காணொளியை முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்நகரில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீர் லாரியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க புதியதாக முயற்சி செய்த வீடியோ ஒன்றை ஆனந்த் மகேந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குளிசாதன பெட்டி அதாவது ஏசி-யில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்கும் வழிமுறை உள்ளது. ஏசி யூனிட்டின் கன்டென்சேட் வடிகாலில், தண்ணீர் குழாய் இணைக்கப்பட்டு, தண்ணீரை சேகரிப்பு தொட்டியில் செலுத்தும் அமைப்பை பற்றி அந்த காணொளியில் காண்பிக்கப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் பெரும்பாலோரின் வீடுகளில், நிறுவங்களின் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. அந்த ஏசி-யில் இருந்து வரும் தண்ணீரை இப்படி சேமிப்பதன் மூலம் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.
இப்படி சேமித்த இந்த தண்ணீரை வாகனங்களை சுத்தம் செய்ய, வீடுகளை சுத்தம் செய்ய, பூச்செடிகளுக்கு ஊற்ற பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இந்த காணொளி காட்டுகிறது.
மேலும் இந்த காணொளியை பதிவிட்ட ஆனந்த் மகேந்திரா, “இந்தியா முழுவதும் மக்கள் எங்கெல்லாம் ஏசி பயன்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் கிடைக்கும் நீரை பத்திரமாக சேமித்து வைக்க வேண்டும். தண்ணீர் என்பது செல்வம். இது பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டும்…” என்று பதிவிட்டுள்ளார்.
This needs to become standard equipment throughout India wherever people use A/Cs
Water is Wealth.
It needs to be stored safely…
👏🏽👏🏽👏🏽
Spread the word. pic.twitter.com/vSK0bWy5jm
— anand mahindra (@anandmahindra) March 16, 2024