குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் மக்கள் விண்ணப்பம் செய்வதற்காக இணையத்தளம் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது ‘CAA-2019’ என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இச்சட்டம் கடந்த 11-ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.
இந்தச் சட்டமானது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லீம் நாடுகள் என்பதால், சிஏஏ சட்டத்தில் முஸ்லீம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.