ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்றும், எனினும் தேர்தல் நடத்துவதில் ஆணையம் உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்களவை தேர்தல் நிறைவுபெற்றவுடன் அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுடன் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளதாகவும், ஆனால் அது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.