ஒன்று முதல் ஏழு கட்டமாக 2024 தேர்தல் ! – முழு விவரம்
Oct 25, 2025, 11:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒன்று முதல் ஏழு கட்டமாக 2024 தேர்தல் ! – முழு விவரம்

Web Desk by Web Desk
Mar 16, 2024, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே கட்டம் முதல் ஏழு கட்டமாகத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்கள் விவரங்களை டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, அருணாச்சல், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், உத்தரகாண்ட், அந்தமான் நிகோபார் தீவு, சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா, மணிப்பூர், திரிபுரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இரண்டு கட்டமாகத் தேர்தலை சந்திக்கின்றன.

மூன்று கட்டமாக அசாம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும், ஜார்க்கண்ட், மத்திய பி…
[8:10 pm, 16/03/2024] Vadivel Jtv: 2024 – மக்களவை தேர்தல் – முழு விவரம்

2024-ம் ஆண்டு 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு டெல்லியில் வெளியானது.

அதன்படி, முதற்கட்ட தேர்தல் – ஏப்ரல் 19 ம் தேதியும், 2 -ம் கட்ட தேர்தல், ஏப்ரல் 26 -ம் தேதியும் நடைபெறுகிறது.

3 -ம் கட்ட தேர்தல், மே 7 -ம் தேதியும், 4 -ம் கட்ட தேர்தல், மே 13 – ம் தேதியும் நடைபெறுகிறது.

5 -ம் கட்ட தேர்தல், மே 20 -ம் தேதியும், 6 -ம் கட்ட தேர்தல், மே 25 -ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜுன் 1 -ம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு (39), புதுச்சேரி (1), அருணாச்சல் பிரதேசம் (2), அசாம் (5), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), உத்தரப்பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் மற்றும் நிகோபார் தீவு (1), ஜம்மு காஷ்மீர் (1), லட்சத்தீவு (1) ஆகிய மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 102 தொகுதிகளில், மார்ச் 20 -ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 27 -ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 28-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படுகிறது. ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்படும்.

இரண்டாம் கட்டத் தேர்தலில், அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), கர்நாடகா (14), கேரளா (20), மத்திய பிரதேசம் (7), மகாராஷ்டிரா (8), மணிப்பூர் (1), ராஜஸ்தான் (13), உத்தரப்பிரதேசம் (8), திரிபுரா (1), மேற்கு வங்கம் (3), ஜம்மு காஷ்மீர் (1) மாநிலங்களில் நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 89 தொகுதிகளில், ஏப்ரல் 26 -ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகளும் எண்ணப்படுகிறது.

மூன்றாம் கட்டமாக, அசாம் (4), பீகார் (5), சத்தீஸ்கர் (7), கோவா (2), குஜராத் 26), கர்நாடகா (14), மத்திய பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), உத்தரப்பிரதேசம் (10), மேற்கு வங்கம் (4), தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (1) மற்றும் டாமன் மற்றும் டையூ (1), ஜம்மு காஷ்மீர் (1) ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 94 தொகுதிகளில், மே 7-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

நான்காம் கட்டமாக, ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரப்பிரதேசம் (13), மேற்கு வங்கம் (8), ஜம்மு காஷ்மீர் (1) ஆகிய மாநிலங்களில் தேர்தல்நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 96 தொகுதிகளில், மே 13 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்படுகிறது.

ஐந்தாம் கட்டத்தேர்தல், பீகார் (5), ஜார்க்கண்ட் (3), மகாராஷ்டிரா (13), ஒடிசா (5), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (7), ஜம்மு காஷ்மீர் (1) ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 49 தொகுதிகளில், மே 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

ஆறாம் கட்டமாக, பீகார் (8), ஹரியானா (10), ஜார்க்கண்ட் (4), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), டெல்லி (7) ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 57 தொகுதிகளில் மே 25-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் அனைத்தும் எண்ணப்படுகிறது.

ஏழாம் கட்டமாக, பீகார் (8), இமாச்சல் பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரப்பிரதேசம் (13), மேற்கு வங்கம் (9), சண்டிகர் (1) உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், அரசியல் களம் சூடாகியுள்ளது.

Tags: 2024 Lok Sabha polls2024 Lok Sabha Election2024 elections
ShareTweetSendShare
Previous Post

தேர்தலை ED – IT கண்காணிக்கும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டி

Next Post

மறக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ரஜாக்கர் திரைப்பட குழுவுக்கு நன்றி : அண்ணாமலை

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies