பிரதமர் மோடி தலைமையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 4 கிலோ மீட்டருக்கு பேரணி நடைபெறுகிறது.
இந்த நிலையில், 18-ம் தேதி மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவை வருகிறார். கோவை வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் தயாராக உள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து மாலை 5.45-க்கு மணிக்கு வாகனப் பேரணி துவங்குகிறது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த பேரணி, ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. நாளை இரவு கோவை சர்க்யூட் ஹவுஸ்-ல் தங்கும் பிரதமர் மோடி செவ்வாய்கிழமை காலை கேரளா செல்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு கோவை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் அதாவது 19 -ம் தேதி காலை 11 மணி வரை கனரக வாகனங்கள் கோவை நகருக்குள் வர அனுமதி இல்லை.
நாளை அதாவது 18-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை கோவை 100 அடி மேம்பாலம், சிவானந்தா காலனி, டிபி ரோடு, புரூக்பீல்ட் ரோடு, அவனாசி ரோடு மற்றும் பழைய மேம்பாலம் ஆகிய பகுதிகளின் வழியாக பொது மக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.