பாஜகவுக்கு தமிழர் தேசம் கட்சி ஆதரவு அளித்துள்ளதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமது X தளத்தில், தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணன் செல்வகுமார் வரும் பாராளுமன்றத் தேர்தலில்,பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி தொடர, தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். அவருக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தமிழகத்திலும் நேர்மையான, ஊழலற்ற அரசியல் மாற்றம் உருவாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஒருங்கிணைந்து செயல்பட அண்ணன் திரு. செல்வகுமார் உறுதி மேற்கொண்டுள்ளார்கள். தமிழர் தேசம் கட்சியின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும், நிறைவேற, தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.