திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கோவை மாநகர மக்கள், தேர்தல் நாளன்று மிகச் சரியான பாடமும் புகட்டுவார்கள் என மத்திய அமைச்சர் L. முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்
தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 பாராளுமன்றத் தொகுதிகளையும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, கட்சி கைப்பற்றும் என்பதே நிதர்சனம். இந்த உண்மையறிந்தே, கோவை பேரணியில் ஒன்றிணைந்த மக்கள் வெள்ளமானது இன்று கரைபுரண்டோடியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 பாராளுமன்றத் தொகுதிகளையும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் தலைமையிலான @BJP4India, கட்சி கைப்பற்றும் என்பதே நிதர்சனம். இந்த உண்மையறிந்தே, கோவை பேரணியில் ஒன்றிணைந்த மக்கள் வெள்ளமானது இன்று கரைபுரண்டோடியது.… pic.twitter.com/zTdrYg6MDb
— Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) (@Murugan_MoS) March 18, 2024
தங்களின் குடும்ப நலனுக்காகவும், பத்தாண்டு காலமாய் கொள்ளையடிக்க இயலாத வறட்சியுடன், மீண்டும் ஊழலில் ஊறித் திளைப்பதற்காகவும் கூட்டணி அமைத்துள்ள, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொய் புரட்டுகளுக்கு எதிராக நல்லதொரு தளம் அமைத்துள்ள கோவை மாநகர மக்கள், தேர்தல் நாளன்று மிகச் சரியான பாடமும் புகட்டுவார்கள்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள், வரலாற்றில் இல்லாத வகையில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றியுடன், மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதில், எள்ளளவும் ஐயமில்லை.
“மீண்டும் மோடி, வேண்டும் மோடி-2024!”