ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உத்தி சார்ந்த கூட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.