ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏவும், அதன் நிறுவனர் ஷிபு சோரனின் மருமகளுமான சீதா சோரன், பாஜகவில் இணைந்தார்.
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சகோதரர் துர்கா சோரனின் மனைவி சீதா சோரன். 3 முறை எம்எல்ஏவான இவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மற்றும் ஜார்கண்ட் தேர்தல் பொறுப்பாளர் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் முன்னிலையில் அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தனக்கும் தன் மகள்களுக்கும் எதிராக சதி நடைபெறுவதாகவும், கட்சி மற்றும் (சோரன்) குடும்பத்தினரால் நாங்கள்பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்கண்ட் தனி மாநிலப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் துர்கா சோரன். ஆனால் அவர் மரணம் அடைந்த பல ஆண்டுகள் ஆன நிலையில் அவர் மனைவி பாஜகவில் இணைந்துள்ளார்.