மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலம், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18-வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல், நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே உடனிருந்தார்.
இந்த சந்திப்பின் மூலம், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் மராட்டிய நவநிர்மாண் சேனா இடையே கூட்டணி உறுதியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டணி உறுதியானால், தலைநகர் மும்பையில் போட்டியிட நவநிர்மாண் சேனாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.