தெலுங்கானா மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ஏற்றுக்கொண்டார்.
தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளளார். இதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா மாநில மூன்றாவது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய சிபி. ராதாகிருஷ்ணன், தெலுங்கானா மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அனைத்து அரசியல் கட்சிகள், அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அனைவரின் குரலும் கேட்கப்படும் என்றும், அனைத்து கவலைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். ஜனநாயகம், நீதி, கருணை ஆகிய கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, அனைவரும் ஒன்றிணைந்து, மாற்றத்திற்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சிபி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.