பீகார் மாநிலம் சமஸ்திபூர் அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்தது. மீட்பு பணிக்கு பின்னர் இரயில் சேவை தொடங்கப்பட்டது.
சரக்கு ரயிலின் இரண்டு தடம் புரண்டதால் பீகாரின் சமஸ்திபூர் பிரிவின் பகாஹா ரயில் நிலையத்தில் ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டன. இதனால் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதோடு, இந்தப் பகுதி வழியாகச் செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயிலில் ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இருந்தனர். இது ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்கம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, பீகார் மாநிலம் சமஸ்திபூர் அருகே ரயில் தடம் புரண்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில் இரண்டு பகுதிகளாக பிரிந்ததாக கூறப்படுகிறது. தடம் புரண்டதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
இரயில்வே ஊழியர்கள் தண்டவாளங்களை அகற்றி ரயில்களின் இயக்கத்தை மீண்டும் தொடங்கும் பணிகளை மேற்கண்டனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளரிடம் பேசிய சமஸ்திபூர் ரயில்வே கோட்ட டிஆர்எம் வினய் குமார் ஸ்ரீவஸ்தவா,
சுமை காரணமாக ரயில் பெட்டிகள் தடம் புரண்டன என்றும் ரயில்வே சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. உயிரிழப்பும், காயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.
இதேபோன்ற கடந்த வாரம் சபர்மதி எக்ஸ்பிரஸின் நான்கு பெட்டிகளும் அதன் இன்ஜினும் அஜ்மீர் அருகே தடம் புரண்டன. அதிகாரிகளின் கூற்றுப்படி, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை மற்றும் மறுசீரமைப்பு பணியைத் தொடர உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தடம் புரண்டதைத் தொடர்ந்து, ரயிலின் பின் பகுதி அஜ்மீருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு வடமேற்கு ரயில்வேயில் இருந்து ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் இரண்டு ரயில்கள் திருப்பிவிடப்பட்டன.