சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடக்க போட்டியில் விளையாடுவதற்காக, சென்னை வந்தடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த போட்டி மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடக்க போட்டியில் விளையாடுவதற்காக, பாஃப் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை சேப்பாக்கம் மைதானம் வந்தடைந்த ஆர்சிபி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.