மக்களவை தேர்தலில் அதிமுககூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மார்ச் 20-ம் தேதி (புதன்கிழமை) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில், தமிழகம் முழுவதும் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்தார். அப்போது, தேமுதிக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காகன ஒப்பந்தம் கையெழுத்தானது.
தேமுதிகவுக்கு, திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர், மத்திய சென்னை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.