திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம்! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
Sep 18, 2025, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழி தேரோட்டம்! – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Mar 21, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கத்துடன் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமய தலைமை பீடங்களில் ஒன்றாகவும், சைவ சமயகுரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மிகவும் பிரசித்திப் பெற்றது அங்கு நடைபெறும் ஆழித் தேரோட்டம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இந்த ஆழித்தேர். திருச்சியில் உள்ள பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் ஆழித்தேரில் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆழித்தேரின் எடை 220 டன் ஆகும். 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆழித் தேர் அலங்கரிக்கப்படுகிறது.

இதைத் தவிர, தேரின் முன்புறம் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் ஆழித்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து தேரின் மொத்த எடை 350 டன் ஆகும்.

ஆழித்தேரினை வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்ற ஐதீகமும் அந்த பகுதிகளில் நிலவி வருகிறது.

ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் நகரமே  திருவிழா கோலம் பூண்டுள்ளது.
காலை 5.15 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.

தேரில் இணைக்கப்பட்டிருந்த 500 மீட்டர் நீளமுள்ள 4 வடங்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிடித்து ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கத்துடன் தேரோடும் வீதிகளில் இழுத்துச் சென்றனர். அப்போது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார் திருக்கூட்டத்தினர் பஞ்ச வாத்தியங்களை இசைத்தபடி சென்றனர்.

அப்போது, தேரை தள்ளவும், இயக்கத்தை கட்டுப்படுத்தவும் புல்டோசர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வடம் இழுக்க, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம்  மிகச்சிறப்பாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது.

Tags: Devotees in large numbers participate in 'Aazhi Therottam' (car festival) of Thyagaraja temple in Tamil Nadu's Tiruvarur
ShareTweetSendShare
Previous Post

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரம் : ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி!

Related News

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies