மத்திய பிரதேச மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஜபல்பூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையின் கீழ் பாஜக பெரும்பான்மையைப் பெறும் என்றார். நாட்டில் மோடி அலை வீசுவதாகவும், அவரின் வழிகாட்டுதல்படி தேர்தலை சந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் பாஜக வேட்பாளர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை காண முடிவதாகவும் மோகன் யாதவ் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை தேடுவதாக அவர் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தம் உள்ள 29 இடங்களில் 27 இடங்களை வென்றதாகவும், அதேபோல் 2019 ஆண்டில் 28 தொகுதிகளை கைப்பற்றியதாக தெரிவித்த மோகன் யாதவ், இந்த முறை அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.