2024 பாரிஸ் ஒலிம்பிக் : ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டுக்கு தடை!
Sep 9, 2025, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 பாரிஸ் ஒலிம்பிக் : ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டுக்கு தடை!

Web Desk by Web Desk
Mar 21, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வன இந்த ஒலிம்பிக் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்த போட்டியின் தொடக்க விழாவை செயின் நதியின் நடத்த போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதேபோல் இந்த தொடக்க விழாவின் முக்கிய அம்சமான வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு படகில் நடைபெறவுள்ளது.

இதில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் படகில் 6 கிலோமீட்டர் தூரம் ஈபிள் கோபுரம் நோக்கி பயணிக்க உள்ளனர்.

45 நிமிடங்கள் இந்த அணிவகுப்பு நடைபெற உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா மைதானத்திற்கு வெளியே நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் இந்த தொடக்க விழாவில் பங்கேற்க ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. 2 ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் குண்டு சத்தம் ஓயவில்லை. ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவாக இருந்து வருகிறது.

போர் குற்றத்துக்காக இவ்விரு நாட்டு வீரர்கள் தற்போது சர்வதேச போட்டிகளில் தங்கள் நாட்டு கொடியின் கீழ் இல்லாமல் பொதுவான நபர்கள் என்ற பெயரிலேயே விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து லாசானேவில் நேற்று நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில் கலாசார சிறப்புமிக்க ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்புக்கு ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

Tags: 2024 Paris Olympics: Russia and Belarus banned!
ShareTweetSendShare
Previous Post

மத்திய பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம் : முதல்வர் மோகன் யாதவ் உறுதி!

Next Post

முதல் உள்நாட்டு 1500 குதிரைத்திறன் கொண்ட இன்ஜின் சோதனை!

Related News

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies