மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் கூட்டணி கட்சியினர் இன்று மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்டனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி ஜி , மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து, 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவதற்கு, அவரது கரங்களை வலுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியானது தற்போது வலுவடைந்துள்ளது.
புதிய நீதிக் கட்சித் தலைவர் Dr.AC.சண்முகம் , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் TTV. தினகரன் , இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் , தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பட்சமுத்து ஆகியோர், தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டனர்.
தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தமிழக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பா.ஜ., மாநிலத் தலைவர் சகோதரர் K.அண்ணாமலை ஜி , மத்திய அமைச்சரும் தெலுங்கானா மாநிலத் தலைவருமான கிஷன் ரெட்டி ஜி , தமிழக பாராளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.