பாரதத்தின் எழுச்சி உலக அமைதி, நல்லிணக்கத்திற்கான உத்தரவாதம் என குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வதேச உத்திசார் ஈடுபாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் (International Strategic Engagement Program) குடியரசு துணை தலைவர் தன்கர் பங்கேற்றார்.இந்த இரண்டு வார நிகழ்ச்சிக்கு தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது. இதில் 21 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் 8 இந்திய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் குடியரசு துணை தலைவர் தன்கர் கலந்துரையாடினார்.
அப்போது, பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எழுச்சி உலக அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய நிலைக்கு மிகப்பெரிய உத்தரவாதம் என தெரிவித்தார்.உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளை ஈடுபடுத்துவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இன்றைய ஆற்றல் மிக்க புவிசார் அரசியலுக்கு மத்தியில் இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத எழுச்சி தனித்து நிற்கிறது என்பதை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், விரிவடைந்து வரும் பொருளாதாரம், பயனுள்ள ராஜதந்திரம் மற்றும் வளர்ந்து வரும் மென்மையான சக்தி ஆகியவற்றுடன், அமைதிக்கான உறுதியான சூழல் அமைப்பை ஊக்குவிப்பதற்காக உலகம் இந்தியாவை எதிர்பார்க்கிறது என்று கூறினார்.
உலக அமைதி, பாதுகாப்பு ஆகியவை வளர்ச்சிக்கு அடிப்படையானது என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், வலிமையான நிலையிலிருந்தே அமைதி பாதுகாக்கப்படுவது சிறந்தது என்று உறுதிபடக் கூறினார்.