அமேசான் மழைக்காட்டில் மிகப்பெரிய நதி டால்பின் புதைபடிவ மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகமே நவீன மையமாகிய இன்றைய காலகட்டத்திலும், அன்றைய காலங்களின் மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள், என்னென்ன பொருட்கள் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதை பற்றிய ஆராய்ச்சிகள் ஓயாமல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், பழங்களாக சிலைகள் அவ்வளவு ஏன் சமீபத்தில் 5 மில்லியன் ஆண்டுகள் பழமையான நட்சத்திரம் கூட கண்டுபிடக்கப்பட்டதை பார்த்தோம்.
அந்த வகையில் தற்போது அமேசான் மழைக்காட்டில் மிகப்பெரிய நதி டால்பின் புதைபடிவ மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது, 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் அமேசான் நதிகளில் தஞ்சம் அடைந்ததாகக் கருதப்படும் பெபனிஸ்டா யாகுருனா என்ற டால்பின் இனத்தில் மண்டை ஓடு என மதிப்பிடப்பட்டுள்ளது.
அழிந்துப் போன இனத்தைச் சேர்ந்த இந்த டால்பின் 3.5 மீட்டர் நீளம் வரை இருந்திருக்கும் என்றும், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நதி டால்பின்களில் மிகப்பெரிய டால்பின் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டால்பின் இனம், 24 மில்லியன் முதல் 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்களில் பொதுவாகக் காணப்பட்ட டால்பின்களின் பிளாட்டானிஸ்டோய்டியா குடும்பத்தைச் சேர்ந்தது என்று ஆல்டோ பெனிட்ஸ்-பாலோமினோ தெரிவித்தார்.