வெற்றி மலரை மோடி ஜி கரங்களில் வழங்குவோம் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் தனது X தளத்தில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக என்னை அறிவித்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகில இந்திய பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய நீதிக்கட்சி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தோழமை கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரையை மலரச் செய்து, அந்த வெற்றி மலரை மோடி ஜி கரங்களில் வழங்குவோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.