நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவிற்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாமக தலைமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடலூர்- இயக்குநர் தங்கர்பச்சான், திண்டுக்கல் திலகபாமா, அரக்கோணம் கே.பாலு ஆரணி தொகுதியில் கணேஷ்குமார் போட்டியிடுகின்றனர்.
மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின், விழுப்புரம் முரளிசங்கர் கள்ளக்குறிச்சி தேவதாஸ் சேலம் அண்ணாதுரை தர்மபுரி தொகுதியில் அரசாங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம்(தனி) தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
1.கடலூர்- இயக்குநர் தங்கர்பச்சான்
2.திண்டுக்கல் – திலகபாமா
3. அரக்கோணம்- வழக்கறிஞர் கே.பாலு
4.ஆரணி- கணேஷ்குமார்
5.மயிலாடுதுறை-ம.க.ஸ்டாலின்
6.விழுப்புரம்-முரளிசங்கர்
7. கள்ளக்குறிச்சி- தேவதாஸ்
8. சேலம்- அண்ணாதுரை
9.தர்மபுரி-அரசாங்கம்