பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூடான் புறப்பட்டுச் சென்றுள்ளார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நாட்டு பிரதமர் டிஷெரிங் டோப்கே பாரத பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் வாகனத்தில் சென்ற பிரதமரை சாலையின் இருபுறமும் இந்திய பூடான் தேசிய கொடிகளை ஏந்தியபடி நின்ற பள்ளி சிறுமிகள் கையசைத்து வரவேற்றனர்.
முன்னதாக பூடானில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பாரத பிரதமரை சந்திக்க வரிசையாக நின்று கையில் இந்தியா மற்றும் பூடான் கோடியை ஏந்தி உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஜிக்மே லோசெல் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி சிறுமி ஒருவர் பேசும் போது, பூடானர்கள் ஆகிய நாங்கள் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை எங்களின் ஆதரவாளராகக் கொண்டிருப்பது எங்களின் பாக்கியம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் எங்களின் நிதி பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார். அதேபோல் அவர் எங்களுக்கு நிறைய தடுப்பூசிகளை அனுப்பிவைத்துள்ளார்என்று கூறினார்.
பின்னர் பேசிய மற்றொரு சிறுவன், பூடான் குடிமகனாகிய நான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எங்கள் நாட்டிற்கு வருகை தருவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
பின்னர் பேசிய பெண் ஒருவர், ” இந்திய பிரதமர் மோடி இங்கு வருகை தந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் அண்டை நாடான இந்தியாவுடன் நாங்கள் ஏற்கனவே நல்ல நட்புறவு கொண்டுள்ளோம், தற்போது பிரதமர் மோடி இங்கு வருகை தந்திருப்பது அந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும்” என்று கூறினார்.
பின்னர் பேசிய இளைஞர் ஒருவர், ” பிரதமர் மோடியை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இன்று பூடானில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, ஏனெனில் அவரை காண மாணவர் மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினார்.
மேலும் பலரும் பாரத பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.