டெல்லி புறப்படும் போது பூடான் மன்னர் விமான நிலையம் வரை வந்து வழி அனுப்பி வைத்தது தனக்கு கிடைத்து மிகப்பெரிய கௌரவம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டெல்லி புறப்படும் போது பூடான் மன்னர், ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் விமானநிலையம் வரை வந்து என்னை வழி அனுப்பி வைத்தார். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.
இந்த சிறப்புமிக்க பயணத்தில் பூடான் மன்னர், பிரதமர், அந்நாட்டு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பயணம் இந்தியா-பூடான் நட்புறவுக்கு மேலும் வலு சேர்க்கும். மேலும அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பூடானின் மக்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு மிகவும் நன்றி. பூடானுக்கு இந்தியா எப்போதும் நம்பகமான நண்பனாகவும், கூட்டாளியாகவும் இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்