நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ரா இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாடாளுன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய எம்பிக்கள் குழு அவரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதனையடுத்து அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய புலனாய்வு துறைக்கு லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது. இதனையடுத்து மஹூவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் மஹூவா மொய்த்ரா இல்லம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.