டெல்லியில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த போதைப்பொருள் பிரிவினர் இருவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக ரகசிய தகவலின் அடிப்படையில், டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் பீகாரில் இருந்து வந்த வெளிநாட்டு பயணியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது 92 காப்ஸ்யூல்கள்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் 1.59 கிலோ கோகைன் இருப்பதும் தெரியவந்தது. இந்த போதை பொருள் துவாரகாவில் உள்ள ஒருவருக்கு வழங்கப்பட இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அதனை பெற்றுசெல்ல வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு போதை போருள் கடத்தலில் இருவரையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது துபாய் வழியாகவோ காத்மாண்டுவுக்கு விமான பாதை வழியாக டிராலி பைகளில் மறைத்து வைப்பதன் மூலமோ அல்லது கேப்ஸ்யூல்களை உட்கொள்வதன் மூலமோ இந்தக் கும்பல் போதைப் பொருளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் டெல்லியில் இருந்து காட்மாண்டுவுக்கு வந்த இந்தியர்களை பயன்படுத்தி, கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.