காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை என்றும், அவை செயல்பாட்டில்தான் உள்ளதாக தெரிவித்தார். அந்தக் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம் என்றும், வருமான வரி விதிகளின்படி நிலுவைத் தொகையை செலுத்தாததால் வருமான வரித் துறையால் இணைக்கப்பட்ட ரூ.125 கோடியைத் தவிர, மற்ற பணத்தை எடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கு பல வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ.1,000 கோடி உள்ளதாகவும், அரசியலமைப்பை மீறி பல பான் எண்களுடன் வங்கிக் கணக்குகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விதிகளின்படி ரூ.135 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், காங்கிரஸ் கட்சியின் 3 அல்லது 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை இணைத்துள்ளது என்றும் சம்பித் பத்ரா தெரிவித்தார்.