அசாதாரண தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் எனவும், உலகிற்கு இப்படிப்பட்டவர்கள் தேவை எனப் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ம் தேதி பூடான் சென்றார். பாரோ விமான நிலையத்தில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடி பார்வையிடும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
பூடானின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் இந்த விருதை வழங்கினார்.
இந்நிலையில் அசாதாரண தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என மோடி வருகை குறித்து பூடான் மன்னர் ஜிக்மே கேசர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு அசாதாரண தலைவர் என்றும் இரண்டு நாள் பூடான் பயணத்திற்குப் பிறகு பிரதமர் மோடியைப் பாராட்டிய அவர், இதுபோன்ற தலைவர்கள் உலகிற்குத் தேவை என்று கூறினார். அத்தகைய தலைவர்கள் இருந்தால்தான் நாடுகள் முன்னேறி முன்னேற முடியும் எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல், நம்பிக்கைக்குரிய மற்றும் வளமான எதிர்காலத்திற்கான வழியையும் காட்டியுள்ளதாக வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சாதனைகளைப் பாராட்டுகிறோம், கொண்டாடுகிறோம். நாடுகள் வளர ஒரு அசாதாரண தலைவர் தலைவர்கள் தேவை.
இரக்க உணர்வும், நாட்டின் மீது ஆழ்ந்த பற்றும், தேச சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் விருப்பமும் இருக்க வேண்டும். இத்தகைய தலைவர்கள் அதிகாரத்தை தங்களுக்காக அல்ல மாறாக மக்களின் அசைக்க முடியாத ஆதரவுடன் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வர பயன்படுத்துகிறார்கள். எனது பார்வையில், பிரதமர் மோடி இந்த குணங்களை உள்ளடக்கியவர் எனத் தெரிவித்துள்ளார்.