தண்ணீரை வீணாக்கியதற்காக பெங்களூருவில் உள்ள 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்நகரில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீர் லாரியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெங்களூரு ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையல் அத்தியாவசிய பணிகளுக்கே தண்ணீர் கிடைக்காததால் பெங்களூரு வாசிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த பல வாரங்களாகே இந்த சூழல் நீடிப்பதால், இந்த பிரச்சனை சரியாகும் வரை வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அம்மாநிலத்தில் மக்கள் தேவையில்லாமல் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது, குடிநீரை வீணடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தண்ணீர் வீணாக்கியதற்காக பெங்களூருவில் உள்ள 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) 22 குடும்பங்களிடம் இருந்து 1.1 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளது.
அம்மாநிலத்தில் கார்கள், தோட்டம் மற்றும் பிற தவிர்க்கக்கூடிய நோக்கங்களுக்காக மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதற்கு தண்ணீரை பயன்படுத்தப்பட்டது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிலர் அத்தியாவசியமற்ற முறையில் தண்ணீரை பயன்படுத்துவதால் சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் பெங்களூரு குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.