அமெரிக்கா மற்றும் கனடாவில் ஸ்ரீ ராம் ரத யாத்திரை! - விஷ்வ ஹிந்து பரிஷத்
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா மற்றும் கனடாவில் ஸ்ரீ ராம் ரத யாத்திரை! – விஷ்வ ஹிந்து பரிஷத்

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 03:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக ஸ்ரீ ராம் ரத யாத்திரை அமெரிக்கா மற்றும் கனடாவில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமர் ஆலய பிரதிஷ்டை விழாவின் அட்சதை மற்றும் பிரசாதங்களைப் பக்தர்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து செயல்படும் விசுவ ஹிந்து பரிஷத், கனடாவில் உள்ள தங்கள் அமைப்புடன் சேர்ந்து ஸ்ரீராம் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.  அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து கோயில்களுக்கு இடையே இணைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஸ்ரீ ராம் ரத யாத்திரை ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா – கனடா இணைந்து நடத்தும் இந்த விழாவில் அமெரிக்காவுக்கு ஒரு ரதமும், கனடாவுக்கு இரண்டு ரதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட இந்த ரதத்தில் (தேர்) ஸ்ரீராமர், சீதாதேவி, லெட்சுமணன் மற்றும் ஹனுமன் விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்களுக்கு அட்சதை உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்படும்.

ஏறக்குறைய 60 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை மிக விரிவான அளவில் நடத்தப்பட்டவுள்ளது. சுமார் 16,000 மைல்கள் தொலைவு கொண்ட இந்த ரத யாத்திரை அமெரிக்காவில் 850 கோயில்களிலும் கனடாவில் 150 கோயில்களிலும் நின்று செல்லும். இந்தத் தகவலை இரு நாடுகளைச் சேர்ந்த விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு கூட்டாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களை ஒன்றுபடுத்துவது, பாரம்பரியமான இந்து சம்பிரதாயங்களைப் பரப்புவது இந்த யாத்திரையின் நோக்கமாகும்.

மேலும் இந்த ரத யாத்திரையின் போது உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த ஜனவரி 22-ல் நடைபெற்ற ஸ்ரீராமர் ஆலய பிரதிஷ்டை விழாவின் அட்சதை மற்றும் பிரசாதங்களைப் பக்தர்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சுகர் குரோவ் என்னுமிடத்தில் அமைந்துள்ள விசுவ ஹிந்து பரிஷத் அமெரிக்காவின் தலைமையகத்திலிருந்து ஒரு ரதம் கடந்த 23 அன்று வழக்கமான சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் புறப்பட்டுள்ளது.

முதல் நாள் 500 மைல் தொலைவில் உள்ள கோயில்களுக்கு ரத யாத்திரை சென்றது. இல்லினாய்ஸில் உள்ள பாலாஜி மந்திர், ஜெகந்நாத் மந்திர், சிவ துர்கா ஹிந்து மந்திர், சுவாமி நாராயண் குருகுலம் உள்ளிட்ட இடங்களுக்கு ரதம் யாத்திரையாகச் சென்றது.

ஒவ்வொரு கோயில் முன்பும் ரத யாத்திரை நிறுத்தப்பட்ட போது அதற்குப் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆலய நிர்வாகிகள், பூஜாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீராமரை தரிசித்து ஆசிபெற்றனர்.

வட அமெரிக்க மக்களிடையே இந்த ரத யாத்திரை ஆன்மிக அலையை எழுப்பியுள்ளது. ஸ்ரீராமரே நேரில் வந்து ஆசி வழங்கியதாகப் பக்தர்கள் உணர்ந்தனர் என்று அமெரிக்காவில் உள்ள வி.ஹெச்.பி. அமைப்பின் பொதுச் செயலர் அமிதாப் மிட்டல் தெரிவித்தார்.

கனடாவில் ஸ்ரீ ராமர் ரத யாத்திரை இன்று தொடங்கியது. கனடாவில் உள்ள முக்கிய இந்துக் கோயில்கள் முன்னர் இந்த ரதம் நின்று செல்லும். மேலும் இதை அங்கீகரிக்கும் வகையில் அந்தக் கோயில்களுக்கு ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை வழிகாட்டுதல் பேரில் சிறப்பு சான்றிதழும், ஸ்ரீ பாலராமர் படமும் வழங்கப்படும். கனடாவில் ரதம் 13,000 கி.மீ. தொலைவு பயணித்து 150-க்கும் மேலான கோயில்களில் நின்று செல்லுகிறது. இதன் மூலம் உலகமுழுவதும் இந்து கோயில்களுக்கு இடையே இணைப்பை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Sri Ram Rath Yatra in USA and Canada! - Vishwa Hindu Parishad
Share
Tweet
SendShare
Previous Post

பெங்களூரு தண்ணீர் பிரச்சனை : 22 குடும்பங்களுக்கு ரூ.5000 அபராதம்!

Next Post

பொது மக்களுடன் ஹோலி கொண்டாடிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies