தெலுங்கானாவில் திருமண பத்திரிகை ஒன்றில், ‘திருமணத்திற்கு பரிசுகள் கொண்டு வர வேண்டாம், பிரதமர் மோடிக்கு ஓட்டளியுங்கள்’ என வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் நந்திகாந்தி நர்சிம்லு என்பவர், தனது மகன் சாய் குமாருக்கு மஹிமா ராணி என்பவருடன் ஏப்ரல் 4ல் திருமணம் செய்துவைக்க உள்ளார். அதற்காக திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கி வருகிறார்.
அந்த பத்திரிகையில், பிரதமர் மோடியின் படத்துடன் ‘பிரதமர் மோடிக்கு ஓட்டளியுங்கள். இதுவே நீங்கள் கொடுக்கும் சிறந்த பரிசாக இருக்கும்’ எனத் தெலுங்கு மொழியில் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து நந்திகாந்தி கூறுகையில், ‘பிரதமர் மோடிக்கு ஓட்டளிக்க வைக்க வேண்டும் என்ற எனது யோசனையை குடும்பத்தினர் வரவேற்றனர். மேலும், அதனை செயல்படுத்தவும் அனுமதித்தனர்’ என்றார். இந்த பத்திரிகை தற்போது வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடிக்கு ஓட்டளியுங்கள் என எழுதுவது பிரதமர் மோடியின் மீது இந்திய மக்கள் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் காட்டுகிறது.