மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழக பாஜக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் 102 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
சென்னை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
நீலகிரி தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் சி. நரசிம்மன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் பொன் இராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் @BJP4Tamilnadu வெற்றி வேட்பாளர், அண்ணன் திரு @PonnaarrBJP அவர்கள் இன்று, பொதுமக்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சகோதர சகோதரிகள் சூழ, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அண்ணன் திரு @PonnaarrBJP அவர்களுக்கு, எனது மனமார்ந்த… pic.twitter.com/xcPm8mE3Dp
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 25, 2024
சென்னை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் R.C. பால் கனகராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் செந்தில்நாதன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் பொன் V. பாலகணபதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் A.P. முருகானந்தம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக வெற்றி வேட்பாளர் வினோஜ் P செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக, பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை, காஷ்மீர் முதல் பாரதத்தின் தென் எல்லையாம் கன்னியாகுமரி வரை துணை இருப்பது உறுதி என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.