மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாசிர்ஹாட் தொகுதி பாஜக வேட்பாளர் ரேகா பத்ராவுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
டாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாசிர்ஹாட் தொகுதியில் பாஜக சார்பில் ரேகா பத்ரா களமிறக்கப்பட்டுள்ளார். இவர் திரிணமாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகளால் சித்திரவதை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி ரேகா பத்ராவுடன் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு உள்ளிட்டவை தொடர்பாகவும் அவர் விசாரித்தார். பிரதமர் மோடி அவரை “சக்தி ஸ்வரூபா” என்றும் அழைத்தார். மேலும் அவருக்கு ஊக்கம் அளித்த பிரதமர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.
அப்போது சந்தேஷ்காலியில் பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை பிரதமர் மோடியிடம் ரேகா பத்ரா விவரித்தார்.