5 லட்சம் டன் வெங்காயத்தை, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, என்சிசிஎஃப் மற்றும் நாஃபெட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கூடுதல் கையிருப்புத் தேவைக்காக சுமார் 5 லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பான என்சிசிஎஃப் மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான நாஃபெட் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
நேரடி கொள்முதல் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்படுவதை உறுதி செய்ய, நாஃபெட் மற்றும் என்சிசிஎஃப் ஆகியவை விவசாயிகளை முன்கூட்டியே பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளது.
நாட்டின் ஆண்டு வெங்காய உற்பத்தியில் 72 முதல் 75 சதவீதம் ரபி பருவத்தில் கிடைக்கிறது. காரீப் பருவ வெங்காயத்துடன் ஒப்பிடும்போது, இது சிறந்த தன்மையைக் கொண்டிருப்பதாலும், நவம்பர் அல்லது டிசம்பர் வரை விநியோகத்திற்காக சேமித்து வைக்க முடியும் என்பதாலும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆண்டு முழுவதும் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு ரபி பருவ வெங்காயம் முக்கியமானதாகும்.
நுகர்வோர் விவகாரங்கள் துறை, நாஃபெட் மற்றும் என்சிசிஎஃப் மூலம், 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 6.4 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை வாங்கியது. 2023-ஆம் ஆண்டில் நாஃபெட் மற்றும் என்சிசிஎஃப் ஆகியவற்றின் தொடர்ச்சியான கொள்முதல் மூலம், வெங்காய விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது.