அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.சின்னசாமி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,
மறைந்த புரட்சித்தலைவர் அமரர் எம்ஜிஆர் அவர்கள், முதன்முதலில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற 1977 ஆம் ஆண்டில் இருந்து, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், மக்களின் தொடர் நம்பிக்கையைப் பெற்று மக்கள் பணியில் சிறந்து விளங்கும் ஐயா வி.கே.சின்னசாமி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பினாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தம்மை இணைத்துக்கொண்டார்.
மறைந்த புரட்சித்தலைவர் அமரர் எம்ஜிஆர் அவர்கள், முதன்முதலில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற 1977 ஆம் ஆண்டில் இருந்து, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், மக்களின் தொடர் நம்பிக்கையைப் பெற்று மக்கள் பணியில் சிறந்து விளங்கும் ஐயா திரு… pic.twitter.com/MUVQzMIPjk
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 27, 2024
ஐயா வி.கே.சின்னசாமி அவர்களை வரவேற்று மகிழ்வதோடு, அவரது அனுபவமும், மக்கள் பணிகளும், தமிழக பாஜவுக்கு மேலும் வலு சேர்க்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்திக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.