நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 6.23 கோடி வாக்காளர்கள்! - சத்ய பிரத சாகு
Jun 4, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 6.23 கோடி வாக்காளர்கள்! – சத்ய பிரத சாகு

Murugesan M by Murugesan M
Mar 27, 2024, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர் என்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

6.23 கோடி வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்த வாக்காளர்களில் 3.17 கோடி பேர் பெண் வாக்காளர்கள்; ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 8,465 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் 7 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் 80 வயதுக்கு மேற்பட்ட 6.13 லட்சம் பேர் வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

தேர்தல் அலுவலர்களுக்கு ஏப்.7-க்குள் 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தலைவிட கூடுதலாக 177 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் 117 தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 191 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது. 648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வழங்க இன்றே கடைசி நாள் ஆகும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரை ரூ.70 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரொக்கமாக மட்டும் ரூ.33 கோடியும், ரூ.33 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.27 கோடி மதிப்புள்ள மதுபானம் உள்ளிட்ட பிற பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தனியார் கட்டடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு 13ம் தேதிக்குள் விநியோகிக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு அதிகாரிகள் கொண்டு பூத் சிலிப் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம். தேர்தல் விதிமீறல் பற்றி புகார் அளிப்பவர்கள் தங்கள் விவரத்தை மறைத்துவிட்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்

Tags: 6.23 crore voters are eligible to vote in the parliamentary elections! - Satyapratha Sakhu
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு பேச்சு : விசாரணை நடைபெற்று வருதாக சத்ய பிரதா சாகு தகவல்!!

Next Post

பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies