பிரதமர் மோடி தர்மத்தின் பக்கமும், ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது பேசிய அவர்,
சமூக நீதியை பற்றி பேச முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது என தெரிவித்தார். ஜூன் 4 ஆம் தேதி பாஜக பெரிய கட்சியா? இல்லையா? என்பது பற்றி அதிமுகவிற்கு தெரிய வரும் என எல்.முருகன் காட்டமாக கூறினார். எந்தெந்த கட்சி, எந்த நிலையில் உள்ளது என்று ஜூன் 4 ம் தேதி தெரியும் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தர்மத்தின் பக்கமும், ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும் இருப்பதாக தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி இன்றைக்கு தமிழகத்தில் ஒரு அசுர வளர்ச்சியோடு மிகப் பிரதான கட்சியாக வளர்ந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு மக்கள் மேல் அளவுக்கு அதிக பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார், அது தேர்தல் முடிவு வரும் போது தெரியும் என எல்.முருகன் கூறினார்.