ஜம்மு – காஷ்மீரில் டாக்ஸி ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஷ்மீரின் ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் அருகே பேட்டரி சாஸ்மா என்ற பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு டாக்ஸி ஒன்று சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவு 1 மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டாக்ஸியில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு 10 பேரின் உடல்களையும் கனமழைக்கு நடுவே மீட்டனர். ஜம்முவில் உள்ள அம்ப் க்ரோதாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பல்வான் சிங் (47) மற்றும் பீகாரில் உள்ள மேற்கு சம்பாரனைச் சேர்ந்த விபின் முகியா பைராகாங் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது X இல் பதிவில்,
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி சாஷ்மா அருகே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் பயணிகள் டாக்ஸி ஒன்று கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சாலை விபத்து பற்றி அறிந்த பிறகு ராம்பன் துணை கமிஷனர் பசீர்-உல்-ஹக்கிடம் பேசினேன் என்று தெவித்துள்ளார்.
Spoke to DC #Ramban Sh Baseer-ul-Haq after learning about the tragic road accident in which a passenger taxi rolled down a deep gorge on the Jammu-Srinagar National Highway near Battery Chashma leading to
1/2— Dr Jitendra Singh (मोदी का परिवार) (@DrJitendraSingh) March 29, 2024
காவல் துறையினர், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், மீட்புப் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். விபத்தில் உயிரிழந்துள்ள குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் இதே ராம்பன் பகுதியில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.