பெங்களூரு ‘இராமேஸ்வரம் கஃபே ‘ குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முஜாமில் ஷரீபை, ஏழு நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ‘இராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் மார்ச் 1-ஆம் தேதி சக்திவாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் என்ஐஏ தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய உள்துறை அதிகாரிகள் இந்த வழக்கை எடுத்து தனித்தனியே விசாரித்து வருகின்றனர்.
என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஷிவமொகாவின் முஸவீர் ஹுசைன் ஷாஜிப், அப்துல் மதின் அகமது தாஹா ஆகியோர் தான், குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க மூலப் பொருட்களை அனுப்பி வெடிகுண்டு செய்ய உடந்தையாக இருந்ததாகக் கூறி, முஜாமில் ஷரீப் என்பவர் மூன்று நாட்களுக்கு முன் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வெடிகுண்டு தயாரிக்க மூலப் பொருட்கள் அனுப்பியது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால், கூடுதல் விசாரணைக்கு ஏழு நாட்கள் காவல் வழங்கும்படி என்.ஐ.ஏ., தரப்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், முஜாமில் ஷரீபை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இரகசிய இடத்தில் வைத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
இவர், சிக்கமகளூரு மாவட்டம், கலசா பகுதை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் துபாயில் உள்ளனர். 16 ஆண்டு களுக்கு முன், வேலை தேடி பெங்களூரு வந்துள்ளனர்.
பசவேஸ்வர நகரின் ஹவனுார் சதுக்கத்தில் உள்ள சிக்கன் கவுண்டி என்ற உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
வெடிகுண்டு தயாரிக்க கச்சா பொருட்கள் சப்ளை செய்தது மட்டுமின்றி, குண்டு வெடிப்புக்குப் பின், முக்கிய குற்றவாளி தப்பிக்க உதவியதும் விசாரணையில் ஒப்புக்கொண்டாதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் முசாவீர் ஹுசைன் ஷாஜிப், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகிய குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால், 10 லட்சம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
Request for Information, Identity of the Informer will be kept Secret. pic.twitter.com/JkMUWay23m
— NIA India (@NIA_India) March 29, 2024
Request for Information, Identity of the Informer will be kept Secret. pic.twitter.com/PBXPRH3DtB
— NIA India (@NIA_India) March 29, 2024